“AI-க்கு பின்னாடி மட்டும் ஓடாதீங்க!” – ரமேஷ் தமானி கைகாட்டும் 3 ‘ஜாக்பாட்’ செக்டார்கள்!

ramesh damani investment
Spread the love

இப்போ யாரைப் பார்த்தாலும் AI, AI-ன்னு தான் பேசிட்டு இருக்காங்க. ஆனா, சீனியர் இன்வெஸ்டர் ரமேஷ் தமானி கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறாரு.

AI கண்டிப்பா உலகத்த மாத்தப்போற ஒரு பெரிய டெக்னாலஜிதான், அதுல சந்தேகமே இல்லை. ஆனா, இப்போ மார்க்கெட்ல அதுக்குக் கொடுக்கப்படுற ஓவர் ஹைப் (Hype) கொஞ்சம் ஆபத்தானதுன்னு அவரு எச்சரிக்கிறாரு.

சரி, அப்போ வேற எங்கதான் இன்வெஸ்ட் பண்ணலாம்? அவரு கைகாட்டுற அந்த 3 முக்கியமான செக்டார்கள் இதோ:

டிபென்ஸ் (Defence): இது வெறும் ஆரம்பம்தான்!

இந்தியா இப்போ வெளிநாடுகள்ல இருந்து ஆயுதங்களை வாங்குறத குறைச்சுட்டு, “Make in India” மூலமா இங்கேயே தயாரிக்கிறதுல ரொம்பத் தீவிரமா இருக்கு.

இது ஏதோ ஒரு வருஷத்துல முடியுற விஷயம் இல்ல. அடுத்த பல வருஷங்களுக்கு இந்த ‘டிபென்ஸ்’ செக்டார்ல ஒரு பெரிய வளர்ச்சி (Structural Growth) இருக்கப்போகுது.

அதனால, இப்போதைக்கு இந்தத் துறை ஒரு முக்கியமான கோல்டன் வாய்ப்பு அப்படின்னு அவரு நம்புறாரு.

மெட்டல்ஸ் (Metals): கமாடிட்டி சைக்கிள் திரும்புது!

உலக அளவுல இருக்குற தேவைகள் மற்றும் இந்தியாவோட உட்கட்டமைப்பு (Infrastructure) வளர்ச்சி காரணமா, மெட்டல்ஸ் துறைக்கு ஒரு நல்ல காலம் பொறந்திருக்கு.

ஸ்டீல், அலுமினியம்னு மெட்டல்ஸ் செக்டார்ல இருக்குற பங்குகள் வரும் காலத்துல நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுக்க வாய்ப்பிருக்குங்கிறது அவரோட கணக்கு.

பார்மா (Pharma): பழைய ஃபார்முக்கு வருது!

கடந்த சில வருஷங்களா பார்மா கம்பெனிகள் கொஞ்சம் மந்தமாத்தான் இருந்தது. ஆனா இப்போ அமெரிக்க மார்க்கெட்ல இருக்குற பிரச்சனைகள் குறைய ஆரம்பிச்சிருக்கு, அதே மாதிரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் துறையிலும் ஒரு நல்ல மூவ்மென்ட் தெரியுது.

இதனால, பார்மா செக்டார் இப்போ ஒரு கவனித்தக்க இடத்துல இருக்குதுன்னு தமானி சொல்றாரு.

அவரோட முக்கியமான மெசேஜ்!

மார்க்கெட் இப்போ உச்சத்துல இருக்குற நேரத்துல, எல்லாரும் போற பக்கமே போகாம (Herd Mentality), கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா சில அண்டர்-வேல்யூடு (Under-valued) செக்டார்கள் கண்ணுக்குத் தெரியும்.

AI-ங்கிறது ஒரு நீண்ட காலப் பயணம், ஆனா உடனடியா நல்ல வாய்ப்பு வேணுங்கிறவங்க டிபென்ஸ், மெட்டல்ஸ் மற்றும் பார்மாவை ஒரு கண் வச்சுக்கிறது நல்லது.

குறிப்பு : இந்த செய்தி பொதுத் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது முதலீட்டு ஆலோசனையாக கருதப்படக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரின் கருத்தை பெறுவது அவசியம்.


Spread the love