இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களான TCS, Infosys, HCL Technologies மற்றும் Wipro ஆகியவை, Artificial Intelligence (AI), Generative AI (GenAI), Cloud Computing மற்றும் Automation போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
உலகளாவிய டிஜிட்டல் மாற்றத் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய IT துறை தன்னை புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இது
பார்க்கப்படுகிறது.
Tata Consultancy Services (TCS) நிறுவனம் AI மற்றும் Data Center கட்டமைப்பில் மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. சுமார் ₹54,000 கோடி மதிப்பிலான AI Data Center திட்டம் மூலம், cloud computing மற்றும் enterprise AI சேவைகளில் உலகளவில் முன்னணி இடத்தைப்
பிடிக்க திட்டமிட்டுள்ளது.
Microsoft, AWS போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, AI- ஆதாரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதனால், TCS-ன் வருமான வளர்ச்சிக்கு நீண்டகால ஆதாரம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Infosys நிறுவனம் தனது “Topaz AI” பிளாட்ஃபாரத்தின் மூலம் AI மற்றும் GenAI சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு AI பயிற்சி வழங்கப்பட்டு, நிறுவனத்தின் மனித வளம் எதிர்காலத்திற்கு தயார் செய்யப்படுகிறது.
Hubballi-யில் புதிய AI மற்றும் Cybersecurity மையம் திறக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது Infosys-ஐ உயர்தர டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
HCL Technologies, AI மற்றும் Automation வருமானத்தை தனியாக அறிவிக்கும் முதல் இந்திய IT நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. Enterprise AI, Cloud migration, Digital engineering ஆகிய துறைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரிய ஒப்பந்தங்களை பெற்று வருகிறது.
உலகளாவிய நிறுவனங்களின் digital transformation தேவைகளால் HCL Tech-க்கு வருங்காலங்களில் வலுவான வளர்ச்சி வாய்ப்பு உள்ளது.
Wipro நிறுவனம் Microsoft உடன் இணைந்து AI மற்றும் Cloud அடிப்படையிலான தீர்வுகளை வழங்கி வருகிறது. Copilot, AI360 போன்ற தளங்கள் மூலம் Banking, Healthcare, Telecom போன்ற துறைகளில் automation சேவைகள் வழங்கப்படுகின்றன.
இது Wipro-வின் சேவை வருமானத்தை மேம்படுத்துவதுடன், நீண்டகால ஒப்பந்தங்களை உறுதி செய்யும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.
நிபுணர்கள் கூறுவதாவது, “AI முதலீடுகள் short-term margin-ஐ பாதித்தாலும், medium to long-term- ல் revenue growth-ஐ பல மடங்கு உயர்த்தும்.” அதனால் தான் IT நிறுவனங்கள் முழுமையாக AI-ஐ புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக பார்க்கும்போது, இந்திய IT நிறுவனங்கள் தற்போது பாரம்பரிய software services- இலிருந்து வெளியே வந்து, AI, Cloud, Automation போன்ற high-value technologies-க்கு மாறி வருகின்றன.
இதன் காரணமாக 2026க்குள் IT துறை மீண்டும் வலுவான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலீட்டாளர்களுக்குப் பார்க்கையில், இந்த மாற்றம் நீண்டகாலத்தில் நிலையான வருமானமும் மதிப்பு உயர்வும் தரக்கூடிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
