1993-ஆம் ஆண்டு Infosys IPO-வில் ₹9,500 முதலீடு செய்த ஒருவர், இன்று அந்த முதலீட்டை சுமார் ₹8.5 கோடி மதிப்பாக மாற்றியிருக்க முடியும். இந்த அபார வளர்ச்சி ஒரே நாளில் நடந்ததல்ல.
Share price உயர்வுடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக Infosys வழங்கிய Bonus Shares மற்றும் முதலீட்டாளரின் நீண்டகால பொறுமை தான் இதற்கான முக்கிய காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய பங்கு சந்தையில், “slow and steady wealth creation” எப்படி செயல்படுகிறது என்பதற்கான சிறந்த உதாரணமாக Infosys கருதப்படுகிறது. Bonus Shares குறித்து பொதுவாக இருக்கும் ஒரு தவறான புரிதல் என்னவென்றால், அது உடனடி லாபத்தை தரும் என்ற எண்ணம்.
உண்மையில், Bonus Shares என்பது short-term profit-க்கு அல்ல; long-term wealth உருவாக்கத்திற்கான ஒரு financial mechanism. நிறுவனம் தொடர்ச்சியாக லாபம் ஈட்டும் போது, அந்த லாபத்தில் இருந்து உருவாக்கப்பட்ட reserves-ஐ capital-ஆ மாற்றி, ஏற்கனவே உள்ள shareholders-க்கு கூடுதல் பங்குகளை வழங்குவதே Bonus Shares.
இதனால் முதலீட்டாளரின் share count அதிகரிக்கிறது; ஆனால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு உடனடியாக மாறுவதில்லை. Bonus அறிவிக்கப்பட்ட பிறகு share price குறைவது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.
உதாரணமாக, ₹1,000-க்கு வர்த்தகம் செய்த ஒரு பங்கு, 1:1 Bonusக்குப் பிறகு சுமார் ₹500 ஆக குறையலாம். இதற்கு காரணம் shares எண்ணிக்கை இரட்டிப்பு ஆகுவதால் price adjustment நடப்பதுதான்.
இதில் முதலீட்டாளருக்கு இழப்பு எதுவும் இல்லை. மாறாக, நீண்ட காலத்தில் share count அதிகரிப்பதே முக்கிய பலனாக அமைகிறது.
Infosys இந்த Bonus strategy-யை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளது. தனது வரலாற்றில் Infosys பல முறை 1:1 Bonus மற்றும் ஒரு முறை 3:1 Bonus வழங்கியுள்ளது. இதன் விளைவாக, IPO காலத்தில் 100 shares வாங்கிய முதலீட்டாளரின் holding, 2018-க்குள் 51,200 shares ஆக உயர்ந்தது.
Infosys Bonus Share History (முதல் Bonus முதல் இன்றுவரை)
| வருடம் | Bonus Event | Shares Before | Shares After |
| ஆரம்பம் (1993) | – | 100 | 100 |
| 1994 | 1:1 | 100 | 200 |
| 1997 | 1:1 | 200 | 400 |
| 1999 | 1:1 | 400 | 800 |
| 2004 | 3:1 | 800 | 3,200 |
| 2006 | 1:1 | 3,200 | 6,400 |
| 2014 | 1:1 | 6,400 | 12,800 |
| 2015 | 1:1 | 12,800 | 25,600 |
| 2018 | 1:1 | 25,600 | 51,200 |
100 shares → 51,200 shares, Bonus மட்டும் காரணமாக 512 மடங்கு share growth. இன்றைய மதிப்பு எவ்வளவு? (Approximate calculation – round figure)
- Infosys current price (approx): ₹1,650
- Total shares: 51,200
Total Value Today: 51,200 × 1,650 = ₹8,44,80,000. சுமார் ₹8.4 கோடி இதில் dividends சேர்க்கப்படவில்லை Dividends reinvest செய்திருந்தால் → ₹10 கோடி+ ஆகவும் இருக்கலாம்.
இந்த wealth creation-க்கு Bonus shares மட்டும் காரணமில்லை என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். Infosys-ன் தொடர்ச்சியான லாப வளர்ச்சி, குறைந்த கடன் சுமை, வலுவான cash flow மற்றும் உலகளாவிய IT சேவை நிறுவனமாக வளர்ந்த business model ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.
அதே நேரத்தில், 20 முதல் 30 ஆண்டுகள் வரை பங்குகளை விற்காமல் வைத்திருந்த முதலீட்டாளர்களின் patience தான் இந்த கதையின் மையமாக உள்ளது.
அனைத்து Bonus வழங்கும் நிறுவனங்களும் Infosys போல wealth உருவாக்கும் என்று கருதுவது ஆபத்தானது என்றும் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சில நிறுவனங்கள் profit growth இல்லாமலும், அதிக debt இருந்தாலும், retail investors-ஐ ஈர்க்க Bonus அறிவிப்பதை ஒரு strategy-ஆக பயன்படுத்துகின்றன. இத்தகைய “bonus trap” நிறுவனங்களில் long-term wealth உருவாகும் வாய்ப்பு குறைவு.
Infosys-ன் கதையிலிருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்னவென்றால், market noise-ஐ விட business fundamentals-ஐ புரிந்து கொள்வது முக்கியம் என்பதே.
Small அல்லது mid-cap நிலையில் இருக்கும், தொடர்ச்சியான sales மற்றும் profit growth காட்டும், debt குறைவான, shareholder-friendly management கொண்ட நிறுவனங்களை அடையாளம் காண்பது தான் “next Infosys” தேடும் சரியான வழி என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிவாக, Infosys-ல் முதலீடு செய்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டும் அல்ல. அவர்கள் காலத்தின் சக்தியை புரிந்தவர்கள். பங்கு சந்தையில் wealth விரைவாக உருவாகாது; ஆனால் சரியான நிறுவனம், சரியான discipline மற்றும் நீண்டகால பொறுமை இருந்தால்,
அதே wealth தவறாமல் உருவாகும் என்பதையே Infosys-ன் 30 ஆண்டு பயணம் தெளிவாக காட்டுகிறது.
Disclaimer: Tamilinvestor.com-ல் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் கருத்துகள் கல்வி மற்றும் பொது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இது முதலீட்டு ஆலோசனையாக கருதப்படக் கூடாது. நாங்கள் செபி (SEBI) பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள் அல்ல. எந்த முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன், செபி பதிவு பெற்ற ஆலோசகரை அணுகுவது அவசியம். முதலீட்டில் ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்திற்கு முழுப் பொறுப்பும் முதலீட்டாளருக்கே உரியது.
